Saturday, 25 April 2020

பயணங்கள்...




பயணங்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுபட்ட உணர்வுகளை கொடுக்க வல்லது. குறிப்பிட்ட ஒருவருக்கே வெவ்வேறு பயணங்கள் வெவ்வேறு விதமான உணர்வுகளை கொடுக்கும். ஏன் ஒருவருக்கு ஒரு பயணமே வெவ்வேறுபட்ட உணர்வுகளைக்கூட கொடுத்திருக்கும்.


பயணம் செய்யும் வாகனம், செல்லும் பாதை, கிடைத்திருக்கும் இருக்கை, சக பயணிகள், கூட வந்த உறவுகள் / நண்பர்கள், தங்குமிடம், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பயண இலக்கு, உடல்நிலை, மனநிலை, புற அழுத்தங்கள் என பல விடயங்கள் ஒரு பயணம் எமக்கு கொடுக்கும் உணர்வுகளின் தன்மையை தீர்மானிக்கிறது.


இருக்கையில் அமர்ந்ததும் தூங்கி இலக்கு வந்ததும் விழிக்கும் மனிதர்களை விடுத்து மீதி அனைவருக்கும் ஒவ்வொரு பயணமும் அனுபவம். கணத்தில் ரசிக்க, பின் நினைவுகொள்ள என ஏராளம் விடயங்கள் பயணங்கள் தரும் வரம், வரம் தருவதால் பயணங்கள் கூட தவம்தான்.


பயணங்கள் என்றால் நாடு கடந்து, பல மைல்கள் கடந்து செல்ல வேண்டியவை என்று எந்த விதியுமில்லை; சில கிலோமீட்டர்கள் செல்லும் பயணங்களில் கூட சுவாரஸ்யமான, மறக்கமுடியாத, திகிலான, பெரு மகிழ்ச்சியான பயணங்கள் அமையும்.


அப்படியான சாதாரண பயணங்கள் கொடுத்த சுவாரஸ்யங்கள், திட்டமிடாத திடீர் பயணங்கள், திட்டமிட்ட சுற்றுலாக்கள் என என் பயண அனுபவங்களை இந்த வலைப்பூவில் பதியப்போகிறேன். கூடவே செல்லும் இடங்களின் உணவு மற்றும் உணவகங்கள் பற்றியும் பதிவிட நினைத்துள்ளேன்.


ஒரு வெளிப்படையான என் சுய நாட்குறிப்பாக இதனை பதிவிடுகிறேன்; சில பதிவுகள் சிலருக்கு சுற்றுலா வழிகாட்டியாக, சுற்றுலா பயண அனுபவத்திற்கான தூண்டுதலாக அமைந்தால் மிக்க மகிழ்ச்சி.


பயணங்கள் தொடரும்......

No comments:

Post a Comment