Thursday, 24 December 2020

The way to அனுராதபுர....(part 1)


சென்ஜோன்ஸ் vs சென்றல் (லாஸ்ட் லீக் மச்)

சில மாதங்களில் எல்லாம் 2000 ஆம் ஆண்டு பிறந்துவிடப் போகிறது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானம் எங்களது அண்டர் செவன்டீன் கிறிக்கட் அணியை அதிகாலை வேளையில் அன்போடு வரவேற்கிறது. எங்களுக்கும் (சென் ஜோன்ஸ்) சென்றலுக்குமான (மத்திய கல்லூரி) இறுதி லீக் போட்டி அது. சென்றல் கொலிஜ் மைதானத்தைப் பற்றி  சொல்ல வேண்டுமென்றால் யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய பாடசாலை  மைதானம் அதுதான். வடக்கு தெற்காக ஆடுகளத்தைக் கொண்ட  மைதானத்தின் வட  முனை மணிக்கூட்டுக் கோபுரமுனை என்றும்; தென்முனை சுப்பிரமணியம் பூங்கா முனை என்றும் சொல்லப்படும். யாழ்ப்பாணத்தின் ஆகச்சிறந்த பல கிரிக்கட் போட்டிகளின் ஐ விட்னஸ் சென்றல் கொலிஜ் கிரவுண்ட்தான். 


வடக்கு இலங்கையின் கிரிக்கட்டின் மிகப்பெரும் போரான  'வடக்கின் சமர்'களை அதிகளவில் தன்  மார்பில் தாங்கிய சென்றல் கொலிஜ் மைதானம் அன்றைய சிறு போருக்கும் தயாராகவே இருந்தது. அந்தப் போட்டி எம்மைப் பொறுத்தவரை மிக முக்கியமான போட்டி, 'டூ ஓர் டை'  மச். லீக் போட்டிகளில்  கொக்குவில்  இந்துக் கல்லூரியுடனான போட்டியில் ஏற்பட்ட தோல்வி இந்த போட்டியில் வென்றேயாக வேண்டிய கட்டாயத்தை தந்திருந்தது. அரையிறுதிக்கான வாசல்படி இந்த போட்டியின் வெற்றியே என்பதால் சிறிது நேவேர்ஸ் எங்களுக்குள் இருந்தது. 


முதலில் பந்துவீச ஆரம்பித்த எமக்கு ஆரம்பம்   சிறப்பாக இருந்தாலும்; சென்றல்  பின் வரிசை வீரர் 'கொக்கு' சசி அடித்த அற்புதமான  அரைச்சதம் எமக்கான இலக்காக 199 ஐ நிர்ணயித்தது. அவர்களது மைதானம், மிகப்பெரிய மைதானம், நாங்களோ 17 வயத்துக்குட்பட்டவர்கள், 199 எல்லாம் அன்றய தேதியில் இமாலய இலக்கு. ஆனாலும் சேஸிங் நிதானமாக இலக்கை நோக்கி சென்றுகொண்டிருந்தது; ரெகுலர் இன்டவலில் விக்கட்டுகள் சரிந்துகொண்டிருந்தாலும் ஒவ்வொரு விக்கட்டுகளுக்குமிடையிலான இணைப்பாட்டமும் போதுமானதாக இருந்துகொண்டிருந்தது. 


பீப்பா....  விக்கட்  கீப்பர் பட்ஸ்மன், அது மட்டுமில்லை எங்கள் அணியின் ஸ்டார் பட்ஸ்மன் கூட, என்னைக் கேட்டால் உள்ளூரில்  one of the finest & Most positive Batsman i ever seen in my age என்று சொல்வேன்.  அன்றைய போட்டியின் இறுதி நம்பிக்கையாக ஆடிக்கொண்டிருந்த பீப்ஸ் ஆட்டமிழக்க;  எங்கள் இறுதி  நம்பிக்கையும்  சரிந்ததுவிட்டது. ஒரு வழியாக தட்டுத்தடுமாறி தேவையான ஓட்டங்களின் எண்ணிக்கை 20 க்கு குறைந்திருந்த நிலையில் எட்டாவது விக்கெட்டும் விழுந்தது. 


10 ஆம் இலக்கத்தில் உள்ளே துடுப்பாட்ட(எழுத்துப்பிழை இல்லை..) இறங்கிக்கொண்டிருக்கிறேன்.. ஆனால் எதுவுமே ஐடியா இல்லை, வெல்வோம் என்கிற நம்பிக்கையுமில்லை, உடம்பு முழுக்க டென்ஷன், தோற்றுவிடுவோம் என்பதை முழுமையாக நம்பியிருந்தேன்.  எதிர்கொண்ட முதல் மூன்று நான்கு சூழல்  பந்துகளும் என் மார்பிலும் வயிற்றிலும் ஏறி இறங்கி தடுக்கப்போன எனது துடுப்பை கணக்கெடுக்காமல்  அசிங்கப்படுத்திக் கொண்டிருந்தது. 


பிரியந்தா...! முதல் போட்டிகள் எதிலும் பெரிதாக சோபிக்கவில்லை, மறு முனையில் ஆடிக்கொண்டிடுந்தான். ஆனால் எங்களது சாம்பியன் கிண்ணம் அவனால்தான் கை  கூடவேண்டும் என்பது இரண்டு தடவைகள் எழுதப்பட்டிருந்தது. ஒரு போட்டி இன்றைய போட்டி, அடுத்த போட்டி இறுதிப்போட்டி, இறுதி போட்டியை பற்றி பின்னர் பார்ப்போம். இப்போது மணிக்கூட்டு முனையிலிருந்து வீசப்பட்ட  லெந் பந்து ஒன்றை பிரியந்தா எதிர் கொள்கிறான். இரண்டு ஸ்டெப் இறங்கி வந்து அவன் Loft  பண்ணிய பந்து லோங் ஓன் பக்கமாக மேலெழும்புகிறது. 


மறு முனையில் நின்றிருந்த நான் திரும்பி பார்க்கிறேன், ஸ்கோர் போட்டிக்கு சந்தேகம் வரக்கூடாதென்று ஸ்கோர்போட் பக்கமாகவே அந்த பந்து ஆறாகிறது. வெற்றி வாய்ப்பு நெருங்குகிறது, பிரியந்தாவின் பாசிட்டிவ் ஸ்ரைக்கினால் ஒரு கட்டத்தில் விரைவாகவே  ஸ்கோர் சமநிலையை அடைகிறது.  ஓவரின் முதல் பந்து, வேகப்பந்து வீச்சாளர் ஓடி வருவதை பீதியுடன் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன், இந்தப் பந்தை மறிப்பது மட்டும்தான் என்  நோக்கம், ஸ்கோரிங் பற்றி எல்லாம் துளிகூட சிந்தனை இல்லை. மிடில் ஸ்டம்ப்  லைனில் விழுந்த பந்து பாட்ஸ்சை  நோக்கி வந்தது, லெக் சைடில் திருப்பியிருக்க வேண்டிய பந்தை பிழையாக நேராக  தடுத்தாடினேன், பந்து அவுட் சைட் எட்ஜில் பட்டு லெக் திசையில்  ஒரு ஓட்டம் கிடைக்கப் பெற  போட்டி வெற்றி..! 


முதல் நாள் இறுதி லீக் போட்டியில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் கப்டன் ஸ்டீவ் வோ 120 ஓட்டங்கள் அடித்து அணியின்  வெற்றி ஓட்டம் பெற்ற பின்னர் துடுப்பை சுழற்றிக்கொண்டு ஓடிவந்த  காட்சி மனதில் வர, நானும் அதையே  செய்தேன்; வெறும் 2/3 ஓட்டம் மட்டும் பெற்றிருந்த நிலையில். இத்தனைக்கும் முட்டையிட்ட கோழி பிரியந்தா கொக்கரிக்காமல்  இருக்க, பாத்துக்கொண்டிருந்த கோழி நான்  கொக்கரித்திருந்தேன். வெளியிலிருந்தும் ஏற்கனவே  முட்டையிட்ட கோழிகளும் மகிழ்ச்சியில் கொக்கரித்துக் கொண்டிருந்தன. 


நானோ அடுத்தடுத்த பந்தில் பைத்தியக்காரத்தனமாக  ரன்னவுட் ஆகி வெளியே வந்துகொண்டிருந்தேன்; பிறையின் லாராவின் சாதனையை முறியடித்த திருப்தியைவிட அதிகமான மகிழ்ச்சியில்..!  ஆனால் நடந்ததோ வேறு; வெளியில் வந்தவுடன் எதிர்பார்க்காமல் எல்லோருக்கும் கிழி  விழ ஆரம்பித்தது. அமலசீலன் சேர்... அன்றய எங்களது POG (பிரிபக்ட்  ஒஃப் கேம்). "நெட் ரன்ரேட் தேவை" அது இதெண்டு  நடக்குது. "விடுங்கடா இவர் சென்ரல் கொலிஜ் ஓல்ட் ஸ்டூடன்ட், தன்ட  ஸ்கூல் தோத்த கடுப்பில் கத்திறார்" என்று நம்மள்ல ஒருத்தன் 'பிழையா' ஆறுதல் சொன்னான்; அவன் சொன்னது பிழைதான், ஏனென்றால் நாங்கள் மிக சொற்பமான நெட் ரன்ரேட்டில்தான் அரையிறுதிக்கு தெரிவாகி இருந்தோம்; அமலசீலன் சேர் சொன்னது சரி...!  ஆனால் எனக்கும் அமலசீலன் சேருக்குமான சம்பவங்கள் அத்தோடு நிறைவு பெறவில்லை... அது தொடர்ந்தது, தொடரும்.


சயன்ஸ் ஹோல் - ஒலெவலில் மற்ஸ் D & C எடுத்தால் ஏலெவலில் மற்ஸ் படிக்கலாம் என்று நம்பிய ஆயிரம் பேரில் ஒருவனாக நானும் அன்றைய வகுப்பிற்கு செல்கிறேன். எனது நண்பர்கள் இருவர், யாழ் இந்தக் கல்லூரியை சேர்ந்தவர்கள் "என்ன செமி பைனல்  எங்களிட்ட  வந்து மாட்டீட்டீங்களா? எங்கட ஒப்பினர்ஸ் காணும் உங்களுக்கு, ராகுலன் ஒவ்வரு மெச்சும் முதல் போலே சிக்ஸ் / ஃபோர் அடிச்சித்தான் துடங்குவான்" என out of the ground sledging ஆரம்பித்தனர். 


செமி ஃபைனல் - vs Jaffna Hind

அதற்கு முதல் யாழ் இந்து மைதானத்தில் ஆடிய அனுபவம் பெரும்பாலானவர்களுக்கு இல்லை... பந்துவீச்சு, துடுப்பாட்டம் என்று பலன்ஸான பலம்வாய்ந்த  அணி, சொந்த மைதானம் வேறு...! களமிறங்கினோம். துடுப்பாட நிற்பது ராகுலன், முதல் பந்தில் ஆறடிக்க நிற்பதுபோலவே அவர் ஸ்ரான்ஸ் உணர்த்தியது... ஆனால் பாருங்கள் பந்துவீச தயாராக இருந்தது எங்களது ராகுலன்.   ராகுலன் மாதிரி  swing control & pace  இரண்டையும் சரியாக  மெயின்டெய்ன் பண்ணிய போலேர்ஸ் மிக அரிது... சரியான டெக்னிக் கோச்சேர்ஸ் இருந்திருந்தால் ராகுலன்  இன்னும் அதிக உயரம் போயிருக்கலாம்...!  மறந்துவிட்டேன் உயரம் என்றதும் ஞாபகம் வருகிறது உருவத்திலும் ஆள் ஆஜானுபாகு தோற்ற உயரம்தான்....! ஒரு முனையில் சிக்ஸர் ராகுலன் துடுப்புடன், மறுபக்கம் swing & pace ராகுலன் பந்துடன்.... கொட்டாவி விட்டபடி  deep cover ல் நின்று எந்தப்பக்கம் அந்த ப்ரோ சிக்ஸர் அடிக்கப்போகிறார் எண்டு பார்த்துக்கொண்டே நிற்கிறேன்....! முதல்பந்தே "இந்தா  அடிடா இவனே"  என batsman ஐ invite பண்ணி ஒரு  நேர்த்தியான பவுன்சர்... yes, he also very good batsman, he selected right shot selection... but unfortunately timing missed. little top edged & caught behind.  finally it's an easy soft dismissal in very first ball. scorecard 0/1 

batsman crossed... அடுத்த ஓப்பினர் இரண்டாவது பந்தை எதிர்கொள்ளப்போகிறார், கோபி.. எனக்கு சின்னவயசில இருந்தே நண்பன். அளவுக்கு அதிகமாக உயரமாக வளர்ந்தவர்களில் அவனும் ஒருவன். ராகுலன் இரண்டாவது/மூன்றாவது பந்தை வீசுகிறான்.. out swing பந்து, Just short & pitch wide outside off stump, எட்டிக் cut shot   அடிக்கிறான், top edge,  வானத்தை நோக்கி எழுகிறது, “பீப்பா ஏன் பந்துக்கு போகாமல் மேலே போகிற பந்தை விடுப்புப் பாத்துக்கொண்டு நிக்கிறான்” என்று பார்த்தால்... அய்யய்யோ பந்து காத்து இழுத்து என்னை நோக்கு பறந்து வந்துகொண்டிருக்கிறது... எல்லைக்கோட்டில் எனக்கு பக்கத்தில் யாழ் இந்து அணியும், பயிற்சியாளர்களும்... “விட்டிடுவான், விட்டிடுவான்” என்கிற சத்தம் காதுக்கு கேட்கிறது, உண்மையில் அவ்வளவு உயரமாக எழுந்த பந்து, “அடேய் அதைத்தாண்டா நானும் நினைக்கிறன்" என்பது  அவர்களுக்கு புரிந்ததோ என்னன்னவோ...! இறுதியில்  நான் பந்தைப் பிடிக்கவில்லை, பந்துதான் என்னைப்  பிடித்தது என்பது போல கைக்குள் பந்து சரணடைந்து கிடந்தது...! 0/2  dream start for a  bowling side, அதுவும் semifinal. 48/8 in a stage & 96 all out.  


நாங்களும் சளைத்தவர்களில்லை, 0/1 குமணன், அந்த சீரிஸில் வைத்தால் குடும்பி, அடித்தால் மொட்டை பட்ஸ்மன், ஒன்றில் 0, இல்லை என்றால் 50+ என போய்க்கொண்டிருந்தவன் முதல் ஓவரிலேயே வெளியே வந்துகொண்டிருந்தான். சைலேஷ்.. யாழ் இந்துவின் இடதுகை சகலதுறை வீரன். இடது கை பந்து வீச்சாளர்களுக்கு பந்துவீச்சில் natural swing இருக்கும், இவனுக்கு அது சற்று அதிகமாகவே இருக்கும்.  வழமைபோல சரியாக தீர்ப்புச் சொன்ன அம்பயர் மேல் குற்றம் சொல்லிவிட்டு குமணா வந்து அமர, நானோ பதட்டத்தில்  ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் போய்விட்டேன்... அடுத்தடுத்த பந்துகள் சுவரில்  வந்து சடார் புடார் என தாக்கிக்கொண்டிருந்தது. விஷ்ணுவர்தன்... இடதுகை துடுப்பாட்ட வீரன். மிகைப்படுத்திச் சொல்லவில்லை, போட்டிகளில் இவன் சாதித்தது குறைவு, ஆனால் இப்போதும்  சொல்வேன் எனக்கு பிடித்த Left handed batsman in Jaffna விஷ்ணுதான். சின்ன வயசில யூனிவெர்சிற்றிக்கு விளையாடும்போது கொக்குவில் ஹிண்டு கொலிஜ் மைதானத்தில்  left handed வரதன் அண்ணாவின் பட்டிங் பார்த்திருக்கிறேன். அந்த legend ஐ விஷ்ணு எனக்கு எப்போதும் ஞாபகப்படுத்துவான். அன்று விஷ்ணுவின் நாள்... 60+ அவன் ஸ்கோர் பண்ணியிருக்கவேண்டும்... gem innings. இலகுவான  வெற்றியாக அமைந்தது. எனக்கு இந்த மச்சில் ஒரு சந்தோசமானவிடயம் highest score of mine 43* - செத்த பாம்மை வைத்து அடித்து விளையாடுவதுபோல, அவர்கள் தோற்றபின் அடித்த இன்னிங்ஸ். 


Final -   vs  St. Patrick's College

முதல் வருடம் எங்கள்  மைதானத்தில் வைத்து இறுதிப்போட்டியில் எம்மை போட்டு பிளந்துவிட்டுப் போன அதே அணி. அந்தப்போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து தவிர்க்க ஆஸ்கார் லெவலுக்கு  இஞ்சரி நடிப்பு நடித்த டிலான்தான் இந்த ஆண்டு எமது அணித்தலைவர். டிலான் பற்றி சொல்வதென்றால் practice can make a ordinary batsman to good  batsman என்பதற்கு ஒரு  உதாரணம். ஆரம்பத்தில் பந்தைக் கண்டு பதட்டமாகும் சுபாத்தை டிலானிடம் கண்டிருக்கிறேன்.. பின்னர் சீசன் முடியும் நேரத்தில் he made him as a good batsman. காரணம் ஒவ்வொரு Practice time மும் he improved a lot. ஆனால் டிலானின் அடையாளம் leg spinner. proper right arm wrist spinner with very control variation (googly)


பற்றிக்ஸ் துடிப்பாடிக் கொண்டிருக்கிறது, 150+ ஓட்டங்களுக்கு 7 விக்கட். பிரஷாந்தா...... எங்களது காலத்தின் ஒரு தலை  சிறந்த பற்ஸ்மன் (பந்துவீச்சாளர் கூட) அரைசதம் கடந்து ஆடிக்கொண்டிருந்த பிரசாந்தாவின் விக்கட் எனது கிறுக்குத்தனமான ஒரு பந்துக்கு சரிவதோடு அன்றைய முதல்நாள் ஆட்டம் முடிவடைகிறது. எனக்கு மற்றவர்களை இமிட்டேட் செய்து பந்துவீசுவது பிடிக்கும், டரன் கஃப், அக்தர் என்று என்னை நானே சொல்லி பந்துபோடுவது அப்பப்போ ப்ராக்டிஸில் கிறுக்குத்தனமாக செய்வது....!  அன்றைய  இறுதி ஓவரில் பிரின்சிப்பல் பங்களோ  எல்லையில் இருந்து அக்தர் போல ஓடி வந்துகொண்டிருந்தேன், பிரஷாந்தா இவன் என்னடா கோமாளி எண்டு நிச்சயம் நினைத்திருப்பார்... வழமையைவிட சற்று வேகம் அதிகமானதால் just he missed the ball & bowled himself. 


மறுநாள் 170+ டாக்கெட்டை நோக்கி போராடிக் கொண்டிருக்கிறோம்... regular interval இல் விக்கட் சரிந்துகொண்டிருக்கிறது. ஒரு பக்கத்தில் ராஜாராம். வழக்கமாக அதிகநேரம் மைதானத்தில் மினக்கெட்டாத பையன்.  ராஜாராம் அன்று ஜெய்ஸ்ரீராம்  துணையுடன்  anger ரோல் செய்துகொன்றிருக்கிறார். அப்பப்போ அம்பயரின் கண்களையும், களத்தடுப்பாளர் கைகளையும் ஒரு சக்தி ராஜாராமுக்காகவும் எமக்காகவும் குழப்பிவிட்டுக்கொண்டிருந்தது. தனது செஞ்சரியை தவறவிட்டு 90 களில் ஆட்டமிழந்தாலும்; மறக்க முடியாத, நாம் நன்றி சொல்லக்  கடமைப்பட்ட ஒரு இன்னிங்ஸ் அது, ஏனென்றால் அந்த இன்னிங்ஸ் மட்டும் இல்லை என்றால் அன்றைய எமது  அனுராதபுரப் பயணமும் இல்லை, இந்தப் பதிவும் இல்லை.  


ஆனால்   எனக்கு மைதானத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது, நான் மச் பார்க்கவே இல்லை, அவ்வளவு பதட்டம். மைதானத்துக்கு அருகில் இருந்த வகுப்பறையில் என் பேஸுக்குள் இருந்த பிள்ளையார் படத்தை நிமிடத்துக்கொரு தடவை எடுத்துக் கும்பிட்டுக்கொண்டிருக்கிறேன். நம்பினால் நம்புங்கள் 21 வருடங்கள் கழிந்துவிட்டது, எத்தனையோ பேர்ஸ் மாறிவிட்டது, ஆனால் அந்தப் பிள்ளையார் படம் இப்போதும் என் பேர்ஸில் உள்ளது... காரணம் இந்த மச்தான். விபரம் தெரிந்த நாட்களில் இருந்து கொழும்பை அறியாமல் இருந்த எமக்கு இந்தப் போட்டியில் ஜெயித்தால் கொழும்புக்கு போகப்போகிறோம் என்கிற மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. 


ஆனால் ஏழு விக்கட் போய்விட்டது, அடுத்த விக்கட் போனால் உள்ளே நான் போகவேண்டும், எனக்கு அடுத்தது காண்டி..! எங்களது விக்கட்டில்  ஒன்று போய் பட்ஸ்மான் போல்காட் கழட்டி வைப்பதற்குள் காண்டி  பின்னால் வந்து நின்று ஹாய் சொல்லும் அளவுக்கு batting இல் கலக்குவான்...! but he is a very good finger spinner. 30 ரன்ஸ்களுக்கு மேல் தேவை...  ராகுலன், பிரியந்தாவில் ஒருவர் போனாலே மச் தோல்வி, காரணம் எனதும், காண்டியினதும் capacity எனக்கு நன்றாகவே தெரியும். நான் நினைக்கிறேன் ப்ரியந்தாவுக்கு under presure என்றால் என்னவென்பதே தெரியாதென்று..! அந்த சூழ்நிலையில் நானெல்லாம் defend ஐ தவிர வேறேதும் நினைக்ககூட மாட்டேன், ஆனால் இவனோ சுழட்டி சுழட்டி அடிக்கிறான்...! சென்ரல் மச் எப்படி அசால்டாக இறங்கிவந்து அடித்த சிக் என் கண்ணுக்குள் நிற்கிறதோ; அதேபோல  இந்தப் போட்டியில் ஸ்பின்னருக்கு திரும்பி அடித்த பவுண்ரியும் கண்ணுக்குள் நிற்கிறது....! yes we are the District champions of 1999 - Under 17


சந்தோசத்திற்கு அளவில்லை... வெற்றி ஒரு பக்கம்... கொழும்புக்குப் போகப்போகிறோம் என்கிற சந்தோஷமோ எல்லை கடந்த  மகிழ்ச்சி... ஆனால்... நாம் கொழும்புக்குப் போகப்போவதில்லை... எமக்கான போட்டிகள் இரண்டும் அனுராதபுரம் மற்றும் குருநாகலில் என்பதால் நாம் அனுராதபுரம் போகப்போகிறோம் என்பது  தெரிந்தது....! கொழும்பு இல்லை என்கிற ஏமாற்றம் இருந்தாலும்; சரி அனுராதபுரமாவது  பறுவாயில்லை என்கிற அளவுக்கு மனதை தேற்றிக்கொண்டோம்...! ஆனால் அப்போது எனக்கு தெரியவில்லை பின்னாட்களில் அனுராதபுரம் எனக்கு மனதுக்கு நெருக்கமான இலங்கையின் மாவட்டமாகப்போகிறதென்பது....!


அனுராதபுர பயணம் .தொடரும்..!

No comments:

Post a Comment