கொழும்பு மட்டக்களப்பை இணைக்கும் அழகிய A4 வீதியால் கையஸ் பறக்கிறது. வயிறு அடுத்த களம்காண தயாராகிக் கொண்டிருந்தது, களமோ பாய் வீட்டு புரியாணி; இரப்பையை உரப்பையாக்கி நிரப்பாமல் திரும்பும் பழக்கம் எம்மில் எவருக்கும் இல்லை.
கூகிள் மப்; எனக்கு மிக மிக பிடித்த அப்ளிகேஷன். இலங்கையில் கூகிள் மப் உதவியுன் நான் போட்ட முப்பத்திரண்டு சுற்றுலா திட்டங்களில் மூன்றாவது கூட இன்னும் ஆரம்பிக்காவிட்டாலும் கூகிள் மப் மூலம் இலங்கையை சுற்றிவருவதையும் புதுப்புது திட்டங்களை போடுவதையும் நான் நிறுத்துவதில்லை.
ஆனால் அன்று கூகிள் மப் எங்களை காத்தான்குடியின் மூத்திர சந்தெல்லாம் சுற்றிப்பார்க்க வைத்தது. சவுங்கங் காட்டில் இருந்து புறப்பட்ட நாம் ரம்ஸீன் சொன்ன வழியை சரியாக உள்வாங்காததால்; இருக்கவே இருக்கான் நம்மாளுன்னு Google Map ஐ on பண்ணினால் அது மப்பு தலைக்கேறியவன் கணக்காக விளையாட்டைக் காட்டியது. turn left ல் கூடவர ஆரம்பித்த சனி ஒரு வழியாக அரைமணிநேர அலைச்சலின்பின் ஞாயிறு மதியம் 1.45 க்கெல்லாம் மண்டபத்தில்த்தான் இறக்கிவிட்டது. அதன் பிறகு சுக்கிர ஜோகம் ஆரம்பித்தது.
மாப்பிள்ளை சும்மா ஜிகு ஜிகுன்னு மின்னினார். விருந்து தடல்புடலாக களைகட்டிக்கொண்டிருக்க எமக்கு நல்ல வரவேற்போடு நேராக சேரவேண்டிய இடத்திற்கு சேர்த்தார்கள். எனக்கு இதுதான் முதல் முஸ்லிம் நிக்கா, நிக்கா முதல்நாள் முடிந்து அன்று விருந்து, வலீமா என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன். அவர்களது கலாச்சாரம் புது அனுபவமாக இருந்தது.
புரியாணி, சிக்கன் ப்ரை, மட்டன், முட்டை, அச்சாறு என சஹான் சாப்பாட்டை உருத்தெரியாமல் சிதைத்துவிட்டு வெளியே தென்னை மரநிழலில் வந்தமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அந்த பரபரப்பிலும் ரம்ஸீன் எம்மோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
2.30 கடந்த பின்னர் குழுவாக புகைப்படம் எடுத்தபின்னர் விடைபெற்று புறப்பட்டோம். வயிறு முட்ட தீனி, தண்ணீர் விடாய் பயங்கரமாக இருந்தாலும் சோடா குடிக்கவேண்டும் என்றே அனைத்து நாக்குகளும் கோரஸ் பாடின. ஒரு கடையில் வாகனம் நிறுந்தப்பட்டு ஸ்பிரைட் 2லீட்டர் சோடாக்கள் இரண்டு வாங்கியபின் வாகனம் மீண்டும் புறப்பட முன்னமே ஒன்றரை போத்தல் ஸ்பிரைட் காலி.
காத்தான்குடி மியூசியம்; ரம்ஸீன் சிபாரிசு செய்ததாலும், அங்கு அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோமே என்கிற எண்ணத்திலும் ஆளுக்கு 50 ரூபா டிக்கெட்டில் உள்ளே போனோம்; ஓரிருவர் வராமல் அசதியில் வாகனத்தில் தூங்கப்போகிறோம் என்று இருந்துவிட்டார்கள்.
உள் நுழைந்ததும் நேரே ஹிஸ்புல்லா ஹிஸ்ரி, யோக்கிரஃபி, சயன்ஸ் சாதனைகள் பற்றி ஒரு பெரிய சுவர்ப்பலகை கட்டுரை. கீழ்த்தளம் முழுவதும் 4ம், 6ம், 8ம் நூற்றாண்டு பொருட்கள் என்று கோப்பைகள், ஜொக்குகள், பித்தளை மூக்குப் பேணிகள், பெற்றோள்மக்ஸ் லைட் என்று நாம் முன்னாடி கண்ணாடி பின்னாடி அடுக்கப்பட்ட பொருட்கள்.
"பழைய இரும்பு, பிளாஸ்டிக் சாமானுகள், பழைய இரும்பு, பிளாஸ்டிக் சாமானுகள்" என்று முன்னர் ஊரில் கேட்ட சைக்கிள் பழைய பொருட்களை வாங்குபவர் சத்தம்; அவர் குரல், மாடிலேஷனோடு ஞாபகம் வந்ததை தவிர்க்க முடியவில்லை. சரி இவ்ளோதானா? பேசாமல் போகலாமா என்று நினைத்தாலும்; வந்ததும் வந்துவிட்டோம் மேலே போய் பார்ப்போம் என்று போனால் Worth.
முன் நூற்றாண்டு காலங்களில் இலங்கையில் சோனக சமூகம் வாழ்ந்த வாழ்க்கை முறையை அத்தனை தத்ரூபமாக உருவங்கள் மூலம் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். கப்பல் வணிகம், அரச சபையில் மந்திரிகள், பலசரக்கு கடை, மரக்கறிகள் கடை, விவசாய செய்கை, கொல்லன் பட்டறை முதற்கொண்டு பல தொழில்களையும் அத்தனை உயிர்ப்போடு காண்பித்திருப்பார்கள், அதிலும் லைட்டிங் எல்லாம் அபாரம்.
எனக்கு அவற்றில் மனதில் மிகவும் பதிந்தது ஒரு வீட்டில் வசிக்கும் குடும்பத்தின் ஆக்கம். வாப்பா சாய்மனை கதிரையில் இருந்து பத்திரிகை படிக்கிறார், மகன் அருகில் கீழே இருந்து துவா செய்கிறான். அம்மா மரக்கறிகள் வெட்டுகிறார், சிறிய மகள் படுத்திருந்து புத்தகம் படிக்கிறாள். சமையல் கட்டு, மரக்கறிகள், வராந்தா, அன்றைய ரேடியோ என ப்ப்ப்பா அத்தனை தத்ரூபம். ஹிஸ்புல்லா பற்றிய சுவர்ப்பலகை கட்டுரையை மேல்தட்டு மியூசியம் நியாயம் செய்துவிட்டது.
ஓய்வெடுக்க எல்லாம் நேரமில்லை, மறுநாள் காலையில் கல்லடியை காலிசெய்து கிளம்பி ஆகவேண்டும். எமது குழுவில் ஒருவரான ஜனனனின் அண்ணனும் என் பாடசாலை நெருங்கிய தோழனுமான கோபிநாத் மட்டக்களப்பில் திருமணம் செய்திருந்தார். அவர்களது வீட்டிற்கு ஒரு விசிட் அடித்துவிட்டு அவனையும் அழைத்துச் கொண்டு செல்வது என்பது ப்ளான்.
மட்டக்களப்பு நகரினுள் நுழைந்து விட்டோம். யுத்த வடுக்களை கட்டடங்களில் அறியாமல் இருந்ததாலும், அரச கட்டுப்பாட்டில் முழுமையாக இருந்ததாலும் வடகிழக்கு மாவட்டங்களின் நகரங்களில் மட்டக்களப்பு அழகான நகராக இருந்தது. வாவியின் நடுவே பெரிய வீதிகள், ரவுண்ட போட்கள் என மட்டக்களப்பு நகர் உள்ளே அழைத்தது.
என்னதான் ஸ்பிரைட்டை உள்ளே இறக்கியிருந்தாலும் புரியாணியும் சகாக்களும் செமிக்க பஞ்சிப்பட்டு இரப்பையில் டேரா போட்டு ப்ரன்ஸ் படத்து சூர்யா சுவரை துடைத்தது போல செமிபாட்டு வேலையை செய்துகொண்டிருந்தன. அந்த நேரத்தில் கோபிநாத் வீட்டில் தந்த இஞ்சி பிளேன்டி கொன்றாக்ரர் நேசமணி போல வந்து "மெல்ல மெல்ல, ஏன்னா புரியாணிக்கு வலிக்கும் பாரு" என சடபுடவென செமிக்க செய்யத் தொடங்கியிருந்தது. அருமையான ப்ளேன்டியுடன் அங்கிருந்து கிளம்பினோம்.
மட்டக்களப்பை மீன்பாடும் தேன் நாடு என்ற சொல்வர், அதற்கு காரணம் அந்த கடல்களின் மீன்வளம். ஆனால் மட்டக்களப்பு நகரின் முக்கிய இடங்களை தன்னகத்தே கொண்ட சிறு தீவுதான் புளியந்தீவு. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இதன் தோற்றம் அப்படியே அச்சு அசல் மீனைப் போல இருக்கும். அதிலும் மீனின் கண் இருக்க வேண்டிய இடத்தில் போர்த்துக்கேயர் 1600 களில் கட்டிய பாதுகாப்பு கோட்டை காணப்படுகிறது.
யானைக்கும் அடி சறுக்கும் போது சுவேந்திரனுக்கு சறுக்கக் கூடாதா? கச்சேரியில் வேலை என்பதை வைத்து அண்ணன் கச்சேரி வாசிச்சு கச்சிதமா சாதித்த நாட்கள் ஏராளம். மட்டக்களப்பு கச்சேரி வாசலில் வாகனம் வரவும் செக்கியூரிட்டி மறித்தார். நாம் அருகில் பாக் பண்ணிவிட்டு போவோம் என்று சொன்னதை கேட்காமல் உள்ளே வாகனத்தை செலுத்தியவருக்கு ஈகோ தட்டியது.
யாழ்ப்பாண கச்சேரி அதிகாரியை மட்டக்களப்பு வாயிற் காவலன் மறிப்பதா? ஐயகோ...! எங்கட கச்சேரி சேர் விடுவாரா! தம்பி நான் யாழ்ப்பாண கச்சேரி DO என்று நங்கூரம் போல நச்சென்று வார்த்தையை போட்டான் நம்ம தல. பரவாயில்லை, யாராக இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை என்ன வேலை? என்று பதில் வரவும் அசடு நாலு லீட்டர் மொகரக்கட்டையில் வழிய வழிய வாகனத்தை ரிவஸ் போட்டார் நம் ஆபீசர்.
நான்கு மணிக்கெல்லாம் கோட்டை சுவர்களின் அருகில் நின்று ஆடியசையும் வாவி மகளை பார்த்து பிரம்மித்து போயிருக்கும் நேரத்தில்; மீன் மகள் கிடைத்திருக்கிறாள், இரவு ப்ரையா? டெவலா? என விடுதி ஐயாவுடன் தல சுவேந்திரன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். என்ன அழகு..! மட்டு நகர் அழகான மேடையம்மா, எட்டு திசையும் கலையின் வாடையம்மா என்கின்ற காசி ஆனந்தன் வரிகள் எத்தனை உண்மை!!
மட்டக்களப்பு லைட் ஹவுஸ் வர அடுத்த ஆட்டம் ஆரம்பமாகியது. மட்டக்களப்பு வந்துவிட்டு வாவியில் பயணிக்காமல் போவது; மாப்பிள்ளை மணவறை வந்துவிட்டு தாலி கட்டாமல் போவது போலாகிவிடுமல்லவா? ஒரு இயந்திர படகில் பேரம்பேசி ஏறியமர்ந்தோம். நானும் ரூபனும் தவிர வேறு யாரும் லைஃப் ஜாக்கெட் போட்ட ஞாபகம் இல்லை.
வாவ்வ்வ்... எத்தனை அழகான அனுபவம். நண்பர்கள், படகு பயணம், அழகான இயற்கை என மறக்க முடியாத நிமிடங்கள். ரூபனுக்கு கண் பார்வை எல்லோரையும் விட நிறையவே அதிகம். "அங்க பார் முதலை" என்றான். வாவியில் இடையிடையே சிறுசிறு திட்டுக்களில் மரங்கள் பற்றைகள் காணப்படும். அப்படி ஒரு திட்டின் கரை நிலப்பகுதியில் முதலை. ஓரிருவர் கண்டுவிட்டோம், மற்றவர்கள் காணவில்லை.
ஓர் நீர்க் கரைப்பகுதியை அடைந்து திரும்பும்போது படகு நின்றுவிட்டது. ஆகா.. செந்தில் கவுண்டமணிக்கு ஒஃபர் பண்ணிய நடுக்கடலில் கப்பல் நின்று தானாக சரியாகாவிட்டால் இறங்கி தள்ளும் வேலையாளுக்கு வேலை வந்துவிடுமோ என்றிருக்க படகு இஞ்சின் இயங்க தொடங்கியது. கரையை அண்மித்ததால் மண்ணில் தட்டி படகு நின்றிருந்தது. இப்போது மீண்டும் பயணம் ஆரம்பித்திருந்தது, அழகான மாலைப் பொழுது அஸ்தமனம் நோக்கி நகர நாமும் கோபிநாத்தை வீட்டில் விட்டுவிட்டு விடுதிக்கு திரும்ப தயாரானோம்.
இரவு பார்ட்டிக்கு 'பச்சைத் தண்ணீர்' வாங்கிய பின் சாப்பிடு வாங்க ஹாஜியார் கடையை ரம்ஸீன் சிபாரிசு செய்திருந்தாலும்; முதல் நாள் கொடுத்த திருப்தியால் இப்ராஹிம் ஹோட்டலில் வாகனத்தை இம்முறையும் நிறுத்தி இடியாப்பம், சம்பல், பருப்பு என தேவைக்கு அதிகமாகவே பாசல் செய்துகொண்டு விடுதி திரும்ப இரவு 9 மணியாகியிருந்தது. சுவேந்திரன் தொலைபேசி ஓஃப் ஆகி இருந்ததால் விடுதி ஐயா மீன், இரால். போன்றவற்றை வாங்கி வைத்துவிட்டு காத்துக்கொண்டிருந்தார்; நேரம் பிந்திய கடுப்புடன்.
அரக்குடன் அரக்குலா மீன் பொரியல். இரவுக்கு இடியப்பமும் இரால் பொரியலும். என்னதான் பைட்ஸாக மீன், இரால், முட்டை இருந்தாலும்; சுமந்திரனும், விக்னேஸ்வரனும், டக்ளசும், கருணாவும், கஜேந்திரகுமாரும், My 3 யும் என செம பைட்ஸோடு பெக்குகள் உள்ளே போய்க்கொண்டிருந்தது. பைட்ஸ் அதிகமாக இருந்ததும், போதையும் சிலருக்கு அதிகமாகியிருந்ததாலும் இடியப்பம் பெரியளவில் இறங்கவில்லை. மறுநாள் நாய்களுக்கு அதிகாலையில் நல்ல தீனி.
விடிந்துவிட்டது, புறப்பட வேண்டும். நாம் எழுந்து வருவதற்கு முன்பே தல எழுந்து வந்து விடுதி ஐயாவுடன் பேசிக் கொண்டிருந்தான். தன்னைப் பற்றி நிறைய பில்டப் பண்ணி இருக்கவேண்டும். நித்திரையிலிருந்து எழுந்து வந்த நானோ "சொட்டை ரெடியா" என்று கேட்டதுதான் தாமதம் தலயின் முகத்தில் அத்தனை கோரமான கோபம். அந்த ஐயாவேறு பக்கத்தில் நின்று திரும்பி பார்த்துக் கொண்டிருந்தார்.
என் வயசுக்கும், பொஷிசனுக்கும் உங்களோட இறங்கி வந்து பழகினதுக்கு எவளவு பண்ண முடியுமோ அத பண்ணீட்டீங்க என்பதுபோலத்தான் தல ரியாக்க்ஷன் இருந்தது. எங்களுக்குள்ள வச்சு எவ்ளோ பேசினாலும் தாங்கிக்கொள்ளும் கங்கா முகத்தில இன்னொருத்தர் முன்னால சந்திரமுகிய வர வச்சது என் தவறுதான். காவலன் படத்தில் வடிவேலு "பாஸ் என்னை தனிய கொண்டுபோய் வச்சு கிழி கிழின்னு கிழிங்க, மனப்பூர்வமா ஏத்துக்கிறன்; ஆனா இப்பிடி பொம்பிளை பிள்ளைகளுக்கு முன்னால கேவலமா பேசினீங்க உங்களுக்கும் எனக்கும் இருக்கிற அன்யோன்யம் கெட்டுப்போகும்" என்கிற டயலாக் இந்த சிட்டிவேஷனில் நன்கு பொருந்தியது.
தொடர்ந்து அந்த ஐயா தங்களது சுனாமி அனுபவங்களை கூறத்தொடங்கினார். இந்த விடுதி அவரது மகனுடன் சேர்ந்து அவர்தான் இயக்குகிறார். முதல்நாள் இரவு பைட்ஸ் சமையல்கூட இவர்தான். நல்ல இனிமையான பேச்சுக்கும் உபசரிப்புக்கும் சொந்தக்காரர். தலயும் ஓரளவுக்கு கூல் ஆகியிருந்தது.
மீண்டும் நானே சனியனை தூக்கி பனியனுள் போட்டுக்கொண்டேன். தல யோகாசனத்தில் பலே கில்லாடி, யோகாசனம் மட்டுமல்ல சித்திரம், கைவேலை, விவசாயம், வாகனம், பட்மின்டன், தடகளம் மற்றும் வெடி என பலதிறனில் பலே கில்லாடி. "தல இவங்களுக்கு peacock ஆசனம் செய்து காட்டு தல" என்று கேட்க; தல ஆசனத்துக்கு முயற்சி செய்ய தொடையில் பயங்கரமான நரம்பு பிடிப்பு ஏற்பட்டு வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தது; அதனால் மீண்டும் கடுப்பில் சுத்த தொடங்கியது.
அனைவரும் தயார்... விடுதி ஐயாவுடன் புகைப்படம் எடுத்துவிட்டு வாகனத்தை ஸ்டார்ட் செய்தால் வாகனம் ஸ்டார்ட் ஆகவில்லை. பற்றரி அவுட் போல என டெக்நிக்கல் அறிவுள்ள நண்பர்கள் பேசிக்கொண்டார்கள். வாகனத்தை ஒழுங்கு செய்திருந்த எம்முடன் வந்தவர்களில் ஒருவரான ரூபனின் நெருங்கிய நண்பர் சுகு வாகன உரிமையாளரிடம் தொலைபேசியில் கேட்டு முன் சீற்றை உயர்த்தி ஏதோ செய்தபின் வாகனம் ஸ்டார்ட் ஆகியது.
மாமாங்கப் பிள்ளையார்... மட்டக்களப்பின் பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயில். காலை நேரம் பிள்ளையாரை கும்பிட்டுவிட்டு சாப்பாட்டை முடித்துக் கொண்டு பாசிக்குடா கடலில் குளித்து விட்டு அப்படியே ஊர் திரும்புவது திட்டம். கோயில் அத்தனை அமைதியாக தெய்வீகமாக இருந்தது. மீண்டும் ஒரு ஆன்மா லயப்படும் ஆலயத்தை தொழுத பின்னர் அருகில் இருந்த தீர்த்த குளத்துக்கட்டில் இருந்தோம்.
மீண்டும் பாம்புக் கண் ரூபனுக்கு முதலை தெரிந்தது; ஆனால் வேறு ஒருவருக்கும் தெரியவில்லை. பல நிமிடங்களாக முதலையை பல வழிகளில் காண்பித்தும் யாரும் காணவில்லை. அவன் முதலை இருக்கும் திசைக்கு கல் எறிந்து காட்டியும் பயனில்லை. புறப்படும் நேரம் நெருங்கியது, யாரும் காணாவிட்டால் தான் சொன்னது பொய்யாகிவிடும் என்கிற பதட்டம் அவன் முகத்தில் சதிராடியது. அவன் அதிஷ்டம் நானும் கண்டுவிட்டேன், பின்னர் இருவரும் சேர்ந்து ஒருவழியாக மற்ற ஓரிருவரும் கண்டுவிட்டார்கள். அதன் பின்னர்தான் இலகுவான வழி தெரிந்தது, கமெராவில் ஸூம் செய்து போட்டோவாக மற்றவர்களுக்கு காண்பித்தோம். இதை முதலை ரூபன் செய்திருக்கலாமே என்று இதை எழுதும் போதுதான் தோன்றியது; ஆக அப்போது யாருக்கும் தோன்றாதது தவறில்லை.
கோவில் கிணற்றில் தண்ணீர் குடித்து விட்டு போகலாம் என கிணற்றில் நீர் அள்ளும் போது ரம்ஸீனின் தொலைபேசி அழைப்பு வருகிறது. "போக முதல் வீட்ட வந்திட்டு போங்கோ, அவளவு தூரம் இருந்து வந்தவங்களை வீட்ட கூப்பிடாம இருக்கிறதாண்டு வாப்பா ஏசிட்டு இருக்கார், எல்லாரும் வாங்கோ" என ரம்ஸீன் சொல்ல; நாமோ " பரவாயில்லை நீங்க கல்யாண பிசிதானே, நாங்க வெளிக்கிட்டு மாமாங்கம் வரை வந்திட்டம், இன்னும் ஒரு தடவை வருவம்" என்று சொன்னாலும் ரம்ஸீன் விடுவதாக இல்லை.
மீண்டும் வாகனம் திரும்பியது. முதல்நாள் வலுமா முடிய மாப்பு கதகளி ஆடிய களைப்பில் தூக்கத்தில் இருப்பார், குழப்ப வேண்டாம் என்று ரம்ஸீனிடம் சொல்லாமல் கிழம்பியிருந்தோம். ஆனால் ரம்ஸீன் விடுதாக இல்லை, ரம்ஸீனைவிட ரம்ஸீனின் வாப்பா விடுவதாக இல்லை. அவருக்கு யாழ்ப்பாணத்தில் ரம்ஸீன் எங்களுடன் நட்பில் இருந்தது Something secured ஆக feel பண்ணி இருக்கிறார் போலுள்ளது வராமல் போக விடவே மாட்டேன் என ரம்ஸீனிடம் கராராக இருந்திருக்கிறார்.
சாதாரணமாகவே ஊருக்கு போய் வரும் நாட்களில் ரம்ஸீன் கொண்டுவந்து தரும்; வீட்டில் உம்மா செய்த வட்டிலப்பத்தின் சுவை எனக்கு பரிச்சியமாக இருந்ததால் ரம்ஸீன் தொலைபேசியில் சொன்ன ஆட்டுக் குடல் பாபத் மீது செம நம்பிக்கை இருந்தது. இடியாப்பமா பரோட்டாவா என்கிற சொய்சில் இடியப்பம் தோற்றுப் போனதால் சுடச்சுட பரோட்டா தயாராக எமக்காக காத்திருந்து.
காத்தான்குடி பழக்கடைகளில் சில பழங்களை வாங்கிக்கொண்டிருக்க ரம்ஸீனும் அவ்விடம் வந்துவிட்டார். ரம்ஸீன் வழிகாட்ட காத்தான்குடி வீதியில் இருந்து ஒரு ஒழுங்கை ஊடாக ரம்ஸீன் வீட்டை வந்து சேர்ந்துவிட்டோம்.
வரவேற்பின் பின் உடனடியாக சாப்பிட தயாராகிவிட்டோம். பரோட்டா, சம்பல், அதென்ன உருளைக் கிழங்குக்குள் பயிற்றங்காய் போட்ட கறியா? ஓ.. இதுதான் ஆட்டுக்குடல் பாபத்தா? முதல்முறை காண்கிறேன், முதல் தடவை சுவைக்கிறேன். ப்ப்ப்பா என்ன ஒரு காலை உணவு, மாமாங்க பிள்ளையார் தான் வெஜ்சாக இருந்தாலும் நொன்வெஜ் வெறியர்கள் எமை கைவிடவில்லை.
முதலை ரூபமாக ரூபனுக்கு காட்சி கொடுத்து 20 நிமிடங்கள் எம்மை அங்கு நிறுத்தியிருக்காவிட்டால் நிறைய தூரம் போயிருப்போம், திரும்ப வர சாத்தியம் இல்லாமல் போயிருக்கும். அன்று சதுர்த்தி வேறு என்பதால் எமக்காக சேர்த்து தல சுவேந்திரன் மதியம் வரை பச்சைதண்ணி பல்லில் படாமல் விரதம் இருந்தார், நாமோ ரம்ஸீன் வீட்டுக் காரருக்குகூட மிச்சம் வைக்காமல் ஆட்டு பாபத்தை பதம்பார்த்துக் கொண்டிருந்தோம். சுடு பரோட்டா சம்பல் என்றாலே அந்த லெவலில் டீல் பண்ணுவோம், இதில் அந்தமாதிரி சுவையில் பாபத் வேறு... சொல்லவா வேண்டும்...!
சாப்பாடு முடிய சோபாவில் இளைப்பாறிய எம்முடன் ரம்ஸீனும் பேசிக் கொண்டிருக்க இஞ்சி பிளேன்டீ வந்தது. எம்மைப் பற்றி கூடவே திரிந்த செவ்வாளைக்கு தெரியாதா என்ன? ரம்ஸீன் வீட்டில் ஒரு கறுவா மரம் இருக்கிறது, அந்த மரத்தின் இலைகளையும் கொண்டு போட்டதால் ப்ளேன்டி மறக்கமுடியாத சுவையையும் மணத்தையும் நாக்கிலும் மூக்கிலும் ஒட்டிவிட்டது. இதையே ஒரு கடையில் நாம் குடித்திருந்தால் டீ மாஸ்டர் பிளேன்டி போட்டே செத்திருப்பார்.
ரம்ஸீன், வாப்பா, உம்மா என அனைவரும் வாசல் வரை வந்து வழியனுப்பியது உண்மையில் மனதுக்கு மகிழ்வாகவும் something emotional ஆகவும் இருந்தது. நன்றி ரம்ஸீன் & குடும்பத்தினர்.
நேராக பாசிக்குடா நோக்கி பறந்தது வாகனம், விரதத்தோடும் சுவேந்திரன் விறைப்பாக ஓடிக்கொண்டிருந்தான். சுரேந்திரன் பற்றி எழுதும்போது 'ன்' போடுவதா 'ர்' போடுவதா என்று யோசித்து பார்த்தேன் 'ன்' தான் யதார்த்தமாக பொருந்துகிறது 😋. பாசிக்குடா எனக்கு பெரிய பிரமிப்பாக இருக்கவில்லை, சில மாதங்களுக்கு முன் திருகோணமலை மாபிள் பீச் போனதால்கூட இருக்கலாம். அல்லது அங்கு ஹோட்டலில் தங்கி, ரெஸ்ரோரன்ஸில் உண்டு என முழுமையாக ஒருநாளேனும் இருந்திருந்தால் பிரமிப்பாக இருந்துமிருக்கலாம்.
இலங்கையின் கிழக்கே இந்து சமுத்திரத்தில் பாசிக்குடா பகுதியில் நிலப்பரப்பில் 'ப' போன்ற பகுதியில் ஊடறுத்த நீர்ப்பரப்பே பாசிக்குடா பீச். அலைகள் இல்லாத / குறைவான குளிக்க பாதுகாப்பான கடல். ஆளத்தின் மட்டத்தினை உணர்த்த பாதுகாப்பு கயிறுகள் கட்டப்பட்டிருந்தன. கடற்குளியல் யாருக்குத்தான் பிடிக்காது? இரண்டு மணி நேரக் குளியல், கூடவே 4 ஆண்டுகள் ஆபிரிக்க நாடுகளில் (உகாண்டா என்று நினைக்கிறேன்) நின்று வந்த அனுபவத்தை, ஆபிரிக்க ராணிகளின் அதகளங்களை அபிராம் அலுக்காமல் கிளுகிளுப்பாக கூறியதை கேட்டுக் கேட்டு குறித்தது மறக்கமுடியாத அனுபவம்.
குளித்து முடிந்தாலும் பசியில்லை, ரொட்டியும் பாபத்தும் இரப்பையில் இருந்து இறங்கவில்லை. அங்கிருந்த சிறிய பெட்டி டீக்கடையில் சிலபல பிளேன்டிகளுடன் கிழக்கு ரொட்டி, வடை என லைட்டாக முடித்துக் கொண்டு வாகனம் கிளம்பியது. திருகோணமலை பாதை ஊடாக வந்த வான் இப்போது நாவலடிச் சந்தியால் மேற்காக திரும்பி பொலனறுவை பாதையூடாக போய்க்கொண்டிருந்தது.
நான்கு மணி கடந்திருந்திருக்கும், இடையிலே ஓரிடத்தில் சிலர் வாகனத்தில் இருந்து இறங்கி நின்று எதையோ பார்த்துக் கொண்டு இருந்தார்கள். எமது வாகனமும் இடப்பக்க இன்டிக்கேட்டரை போட்டு சைட் பண்ணி நிறுத்தப்பட்டது. பெரிய வெளியொன்றில் பென்னாம் பெரிய யானையும் ஓரிரு சிறு யானைகளும். சீனாச்சாயலில் ஒரு இளம் சோடி உட்பட பலரும் கண்களாலும் கமெராவினாலும் யானைக் காட்சியை காட்சிப்படுத்தியபடி மாலை நேரத்தை ரசனையாக்கிக் கொண்டிருந்தார்கள்.
முன்னே சோளம் விற்ற நோனாவிடம் சோளம் வாங்கி சாப்பிட்டபடி சிலர் நின்றிருக்க; மற்றவர்கள் ஆங்காங்கே மரங்கள் மறைவில் உச்சா போய்க்கொண்டிருந்தார்கள். சிறிதுநேரம் அங்கு ரிலாக்ஸ் ஆகிய பின் மீண்டும் பயணம் ஆரம்பித்தது; அடுத்த சில நிமிடங்களில் மின்னேரியா பகுதியாக இருக்க வேண்டும், வீதியோரம் மீண்டும் யானை. தனியாக யானை நிற்பது ஆபத்து என்று அனைவரும் தூர நின்று பார்த்துக் கொண்டு இருந்தார்கள். எம் குரங்கு குணம் தான் தெரியுமே; உசிர் போனாலும் செல்ஃபி முக்கியமாச்சே...! ஒரு வழியாக ஓரளவு தூரத்தில் நின்று போட்டோ, செல்ஃபி எடுத்தபின் மீண்டும் புறப்பட்டோம்.
ஹபரன, மருதன்கடவை சந்திகளை கடந்த வான் மிகிந்தலை சந்தியில் இரவு உணவுக்காக நின்றது. காலை ரம்ஸீன் வீட்டு சாப்பாட்டுக்கு பின்னர் சரியான சாப்பாடு நாள் முழுவதும் இல்லாததால் ஒரு பிடி பிடிக்க தயாரானோம். Chamy Restaurant, மருதன்கடவை பக்கமிருந்து வந்தால் மிகிந்தலை சந்தி கடந்தவுடன் இடது பக்கமாக உள்ளது. வெளியே பெரியளவில் நல்ல பார்வை இல்லை, பயங்கர பிசியாக இருப்பதால் சத்தமும் அதிகமாக இருக்கலாம், சேவிஸ்கூட அந்த பிசியில் நூறு சதவிகிதம் இல்லாமல் இருக்கலாம், கொத்து மற்றும் ரைஸ் பற்றி தெரியாது; ஆனால் இரவு நேரத்து சுடச்சுட சோறு கறிக்கு அடிச்சிக்கவே முடியாது.
அனுராதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார நகர் / கிராமங்களின் சோறு கறி சாப்பாட்டிற்கு அடிமை நான். சிங்களவர்களது சமையல் பாணியும் சுவையும் தனியானது, எமது நாக்கு பழகிப்போன எம் ஊர் சோறு கறி போல தொடர்ந்து தினமும் சாப்பிட முடியாதுதான்; ஆனால் அப்பப்போ கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் சிங்களக் கடைகளில் சோறு கறி தவிர வேறெதையும் நான் நினைத்துக் கூட பார்ப்பதில்லை. போஞ்சி பால்கறி, கட்டர்தூள் போட்ட பருப்பு, வல்லாரை / பொன்னாங்காணி, வாவி மீன் என அது ஒரு போதை.
அன்று அந்த போதை உச்சம் தொட்டது, நல்லபசி, சுடச்சுட பிடித்த சிங்கள சோறுகறி, ஒம்லட், நல்ல சுவை வேறு.. சொல்லவா வேண்டும். இந்தக் கடையை ஞாபகம் வைத்திருந்து அடுத்து ஒருதடவை குடும்பமாக மனைவி மகளோடு அனுராதபுரம் சுற்றுலா சென்றபோதும் மறக்காமல் போனோம், அன்றும் ஏமாற்றவில்லை.
அங்கு சாப்பாட்டை முழுப்பிடி பிடித்த பின் மீண்டும் சுவேந்திரன் வாகனத்தை ஒரு பிடி பிடிக்க கையஸ் பறந்தது. ரம்பேவ, மதவாச்சி கடந்து வவுனியாவில் இறக்கம். அடுத்த நாள் வேலை காரணமாக ஜனனனை இறக்கிவிட்டு சம்பத் வங்கி கெஸ்ட் ஹவுஸ் முன் சிறிது நேரம் பேசிவிட்டு மீண்டும் பயணம் ஆரம்பித்தது.
மாங்குளத்தில் எம் சகா கிருஷாந்தனின் கட்டுப்பாட்டில் உள்ள அவரது பெரியப்பாவின் வீடு ஒன்று இருந்தது. அங்கு ஒரு வேலை இருந்ததால் மாங்குளத்தில் அவரது வீட்டிற்கு சென்றோம். இரவு 9 மணி கடந்திருந்தது. கிருஷாந்தன் அங்குள்ள உதவியாளருடன் பேசிக்கொண்டிருக்க நாம் அந்த வீட்டின் பின்புறம் போனோம், அங்கு லத்தி, பெரிய கால் அடையாளம், வேலி பிரிந்திருந்தது போன்றன யானை வந்து போவதை காண்பித்தது.
யானைகள் அட்டகாசம் அதிகமாக இருக்கும்; வாழை, கரும்பு பயிர்களை நாசமாக்கிவிடும் என்பதால் காவலுக்கு ஒருவர் அவசியம் என்பதால்தான் உதவியாளர் இரவில் அங்கு அவதானமாக இருக்க வேண்டும். தல சுவேந்திரன் பயங்கர அசதியாகியிருந்தான். மூன்று நாட்கள் தொடர்ந்து ட்டரைவிங், சதுர்த்தி விரதம் என்று மதியம் பாசிக்குடாவில் பிளேன்டி ரொட்டியோடு இருந்ததால் ஆள் நித்திரை கொண்டே ஆகவேண்டிய கட்டாயம்.
வாகனம் சுகு கைகளுக்கு மாறியது. நிறையவே வாகனம் ஓட்டிய அனுபவமிருந்ததால் அதிவேக ஓட்டத்துடன் முருகண்டி பிள்ளையார் கோவிலும் வந்தது. அங்கு கும்பிட்டு முடித்து புறப்படுவதற்குள் சுவேந்திரனுக்கு நித்திரை கலைந்து மீண்டும் ட்ரைவர் சீட் ஆசை வந்துவிட்டது. மீண்டும் தலை மிதிக்க தொடங்கியது...
யாழ்ப்பாணம் வந்துவிட்டது, அனைவரும் பத்திரமாக வீடு திரும்பிவிட்டோம். ஆனால் அந்த பயணமும், மகிழ்ச்சியான தருணங்களின் நினைவுகளும் தொடர்ந்துகொண்டே இருந்தது... இருக்கிறது... இருக்கும். இப்போது இரண்டு வருடங்கள் கழிந்திருக்கிறது, மீண்டும் மட்டு மண்ணை மிதிக்க சந்தர்ப்பம் அமையவில்லை, ஆனால் அமையும், அமையவேண்டும்..! மீண்டும் நண்பர்கள் குழாமுடன் மட்டக்களப்பு செல்ல கசக்குமா என்ன..!
பயணங்கள் தொடரும்....

![]() |
ரம்ஸீன் வலீமாவில் சஹான் சாப்பாடு |
![]() |
போர்த்துக்கேயர் கோட்டை காவலில் |
![]() |
ரம்ஸீன் வீடு |
![]() |
மின்னேரியாவில் வீதியோர யானை |
No comments:
Post a Comment